பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 1 ஜூன், 2012

குற்றமுள்ளோர்

ஒரு தடவை இயேசுவின் முன் அழைத்து வந்தார்கள். இவள் குற்றமிழைத்தவள் ஆகவே இவளை கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என கோரினார்கள். அதற்கு அவர் அவ்வாறு தண்டிக்கும் படியாக அவள் என்ன குற்றம் செய்தாள் என வினவினார். அவர்கள் பல குற்றங்களை முன்வைக்க அவரோ இதற்கு இப்படி தண்டணை எதற்கு என அமைதியானார். அவர்களோ அவரை விட்டபாடாக இல்லை. இம்சை தாங்கமுடியாது இறுதியாக “உங்களில் எவனொருவன் குற்றமிழைக்காதவனோ அவன் முதலில் கல்லை எறியட்டும்” என்று உரைத்து கண்களை மூடினார். சிறிது நேரத்தில் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது அங்கு அவளைத்தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக